மகளிருக்கான ஒரு நாள்..

எல்லோரும் போற்றுகிறார்களே என ஆவலாய் தெரிந்து கொள்ள வரலாற்றுப் பக்கம் போனேன்..

வரலாறு தகராறாக பதியப்பட்டிருக்கிறது…

International Ladies Garments Worker’s Union
1908 March 8 ல்

பெண்கள் தங்கள் உரிமையை வேண்டி ஒரு strike நடத்தினார்களாம் அமெரிக்காவில்…

அந்த நாளைப் பிற்காலத்தில் மகளிர் தினமாக்கி விட்டார்களாம்…

வரலாற்றை சரியாய் பதிய வேண்டும் என ஆராய்ந்தவர்கள் 1908 march 8 ல் அப்படி ஒரு strike நடந்ததற்கான ஆதாரமில்லை என்கிறார்கள் பாவம் மகளிர் தினம்!

கொண்டாடும் தேதியிலே குண்டடிபட்டு குற்றுயிராய் கிடக்கிறது..

சரி போனால் போகட்டும் தேதியில் என்னடா மகளிர் தினம்…

மகளிருக்கான தினத்தைக் கொண்டாடலாம் என அடுத்துப் படித்து பார்த்தால்..

கம்யூனிஷமும் கேப்டலிஸமும் மோதிக் கொள்கிறது ….
1914 என ஜெர்மனும் 1917 ல் ரஷ்யாவும் இன்னும் பிற நாடுகளும் மோதிக் கொள்கின்றன..

தங்கள் நாட்டில் பெண்கள் கூட்டமாய் வீதியில் நடந்து சென்றதை எல்லாம் புரட்சியாக்கி விட்டார்கள் மேற்கத்தியர்கள்…

ஆதலால் நாங்கள் தான் மகளிர் தினத்திற்கு சொந்தக்காரர்கள் என ஒவ்வொருவரும் மோதிக் கொள்கிறார்கள்…

அதையும் தாண்டி கொண்டாட கொடிபிடிக்க முண்டியடித்தால்..

நம்ம ஒபாமா.. முன்னால் அமெரிக்கா அதிபர் 2011 ல் மகளிர் தினத்தின் நூற்றாம் ஆண்டை
அமெரிக்காவில் தொடங்கி வைத்துக் கொண்டாடுகிறார்….

ஆப்கான் போன்ற கலவரப் போர் பகுதிகளில் பெண்கள் ஒடுக்கப்படுவதாக red cross கண்ணீர் வடிக்கிறது…

அதே 2011 ல் தாஹ்ரீர் ஸ்கொயரில் நடந்த மக்கள் திரளில் ஆண்கள் மகளிர் தினத்தைக் கொண்டாட விடாமல் பெண்களை வதைத்தார்கள் என பொய்யாய் ஒரு பத்திரிக்கை ஆவணப்படுத்தியுள்ளது….

பாகிஸ்தானின் elite class women’s கள் வருடந்தோறும் மகளிர் தினத்தை celebrate செய்கிறார்கள் என்கிறது ஒரு செய்தி…

இப்படியெல்லாம் முன்னுக்குப்பின் தொடர்பில்லாமல் வரலாறு எழுதியவர்கள் தாங்கள் மெனக்கெட்டதை தவிர்க்க…

ஒரு வரியில் இப்படி எழுதலாம்…

மகளிர் தினம் என்பது
முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடைக்கும் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கும்
பின்பற்றும் கொள்கைக்கும் இஸ்லாமிற்கும்
எதிரான உருவாக்கம்…

இதற்கு ஒரு காரணம் உண்டு…
நிர்வாணமாய் கஃபாவை சுற்றிய ஆணாதிக்க சமுகத்தில் ..

ஆண் குழந்தையற்றவன் சமுக அந்தஸ்தோ பிடிமானமோயில்லாத வேரற்றவன் என்ற ஆணாதிக்க சமுகத்தில்

பெண் குழந்தை பிறப்பை கேவலமாய் கருதிய சிலை வணக்க சமுகத்தில்…

பெண்ணை கேளிக்கையாகக் கருதிய மூட சமுகத்தில்…

பெண்ணுக்கு எவ்வித மதிப்பும் அற்ற சந்தைப் பொருளாதார சமுகத்தில்

مَا كَانَ مُحَمَّدٌ اَبَآ اَحَدٍ مِّنْ رِّجَالِكُمْ وَلٰـكِنْ رَّسُوْلَ اللّٰهِ وَخَاتَمَ النَّبِيّٖنَ وَكَانَ اللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمًا‏
(மக்களே!) முஹம்மத் உங்களுடைய ஆண்களில் எவருக்கும் தந்தையல்லர். ஆனால், அவர் அல்லாஹ்வின் தூதராகவும், இறுதிநபியாகவும் இருக்கின்றார். அல்லாஹ் ஒவ்வொன்றையும் அறிந்தவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 33:40)

எனும் அறிவிப்பை செய்து பெண்ணின் உரிமையை நிலைநாட்டிய முஹம்மது صلي الله عليه وسلم ன் அறிவிப்பு…

ஆண்களுக்கு …
ஆதிக்க வெறி கொண்டவர்களுக்கு..
பெண்களை கேளிக்கையாக எண்ணும் ஆண்களுக்கு ஏற்புடையதே அல்ல.

அவர்கள் எல்லோரும் இஸ்லாத்தின்
இன்றைய வீச்சை வளர்ச்சியை தடுக்க
இது போன்ற விழாக்களை உண்டாக்குகிறார்கள்…..

பாவம் விழாக்கள் கால்கோல் நட்டிய
மறு நிமிடம்முறிந்து விழுகிறது மேற்குலகில்.

இந்தியாவில் சொல்லத் தேவையில்லை
சிலையை திறக்க ஆலாய் இறக்கை கட்டி பறக்கும் பிரதமரின் தலைமையில் இயங்கும் நாடு இது..

பெண்ணின் பிறப்புறுப்பை போற்றி வணங்கும் புண்ணியஸ்தலம்…

வன்புணர்ச்சி செய்து பெண்ணைக் கொல்வதும்
கடவுளச்சியாக்கி பெண்ணைப் போற்றுவதும்
பாரதத்திற்கு பிடித்தமான பொழுதுபோக்கு..

எல்லாம் சரி மற்றவர்கள் மகளிர்தினம் கொண்டாடுவதில் அர்த்தம் உண்டு..

காலம் எல்லாம் பெண்களை வதைக்கிறார்கள் வெறுக்கிறார்கள்
அதனால் ஒரு நாள் கொண்டாடுகிறார்கள்…

ஆனால் சொர்க்கம் செல்ல பெண் குழந்தையை மூன்றாய் நான்காய் பெற்றெடுங்கள் பேணி வளர்த்திடுங்கள் என சொல்லி சென்ற முஹம்மது صلي الله عليه وسلم ன் வழி தோன்றல்களுக்கு என்ன ஆனது…

நாளும் மகளிரை கொண்டாடுவோருக்கு
கொண்டாட ஒரு மகளிர் தினம் ஏன்?

Leave a reply:

Your email address will not be published.

Site Footer