சிலையை கூடுமா? கூடாதா?

சிலையை கூடுமா? கூடாதா? இப்படிக் கேட்க தொடங்கி விட்டார்கள் புதிய இஸ்லாமிய தாஃயிகள்!

அடுத்தவர் கடவுளை குறை கூறக் கூடாது! ஆதலால் சிலையை உடைக்க கூடாது! என சொல்லியவர்கள்…

அடுத்தவர்கள் உடைக்கப் போவதாய் சொல்லும் விஷயத்தில் அமைதி காக்க அறிவுரை வழங்குகிறார்கள்…

தாஃயிகள் பாவம்!

அல்லாஹுவை வீட்டில் அணியும் உள்ளாடை சமாச்சாரமாக்கி விட்டார்கள்.

அதனால் அடுத்தவர்களின் உள்ளாடையை பார்க்காதே என்கிறார்கள்!

அறிவுக்கும் தெளிவுக்கும் ஒவ்வாதவாறு அல் குர் ஆனை ஹதீதை வாசித்திருக்கிறார்கள்…

Sorry! யாரோ மேடையில் உளறியதை காது குளிர கேட்டிருக்கிறார்கள்…

அதை உள்ளத்தில் தேக்கி விட்டு அடுத்து அல் குர் ஆனை ஓதியிருக்கிறார்கள்..

அது தொண்டையை தாண்டி இறங்கவில்லை!

என்ன செய்வார்கள்?

பேரோ தாஃயி! பேசியே ஆக வேண்டும்.

ஆகவே பேசுகிறார்கள்

சிலை விஷயத்தில் பேசாதிருங்கள்..

அல்லாஹுவை உள்ளறை சமாச்சாரம் ஆக்குங்கள்..

எனக்கு இதில் ஒரே ஒரு சந்தேகம்..

இவர்கள் தாஃயிகளா?
சங்க உறுப்பினர்களா?

ஏன் சந்தேகம் என்றால்…

எப்பொழுதும் சங்கத்தின் ஆதரவாகவே அச்சப்பட்டு அடிபணிந்து பேசுகிறார்கள்..

ஆதலால் என் கேள்வி!

சிலையைக் கூடுமா? கூடாதா?
சிலைதைப் பற்றி பேசலாமா? பேசக் கூடாதா?

Leave a reply:

Your email address will not be published.

Site Footer