ஆலிம்களிடம் ஒரு வேண்டுகோள்

நிறைய உலமா பெருமக்கள் அண்மைகாலமாக WhatsApp லும் Facebook லும் தொடர்பில் உள்ளீர்கள்…

உங்களிடம் எனது ஒரு வேண்டுகோள் கோரிக்கை…

கடந்த 30 வருடமாக தமிழக முஸ்லிம் சமுகம் பெரும் பெரும் பிரச்சனைகளை சமுகப் பிரிவுகளை பிரிவினைகளை சந்தித்து வருகிறது…

இதற்கு ஒவ்வொருவரும் தங்களின் நிலையிலிருந்து பிறரை குறை காணுகிறார்கள் குற்றப்படுத்துகிறார்கள்.

இது சமுகத்திற்கு பலனளிக்காமல் மென்மேலும் பிரிவுகளுக்கும் பிரிவினைகளுக்கும் குற்றம் குறை கூறுவதற்கும் பயனாகிப் போகிறது..

ஆதலால் எவ்வித காய்தலும் உவர்த்தலும் இல்லாமல் ஒரு முஸ்லிம்..
அதிலும் ஒரு ஆலீம் என்ற சமுக பொறுப்புணர்வோடு..

கடந்தகாலங்களில் நிறைந்திருந்த பிரிவுகள் பிரிவினைகளை எல்லாம் ஆராய்ந்து…

இனி வருங்காலத்தில் முஸ்லிம் சமுகம் என்ன செய்ய வேண்டும்?
எப்படி செயல்பட வேண்டும்?
எதற்கு முன்னுரிமை தர வேண்டும?எவ்வகையில்/வழியில் ஒற்றுமை பேண வேண்டும்?
எது வரை விட்டுக் கொடுக்க வேண்டும்? எனும் ரீதியில் ஆக்கப்பூர்வமான முறையில் எழுதவும் விவாதிக்கவும் முன்வர வேண்டும்..

முஸ்லிமாக ஒருவன் தனது முழு அடையாளங்களோடு வாழ்வது தன்னளவிலும் புறசூழல்களாலும் கேள்விக்கு உள்ளாக்கப்படும் ஒரு தஜ்ஜாலியத்தின் நிலையில் உலகம் பயணிப்பதாக இஸ்லாமிய அறிஞர் பெருமக்கள் கூறியுள்ளக் கருத்தும் எனது வேண்டுகோளுக்கான பல காரணங்களில் மிக முக்கியமான ஒரு காரணம்…

மேலும் பல வேளைகளில் வலைதளங்களில் பங்கெடுக்கும் முஸ்லிம் இளைஞர்களின் வரைமுறையற்றக் கோபம்
வார்த்தைப் பிரயோகம் தவறான வாதம் தப்பான அணுகுமுறை என பலவும் எனது வேண்டுகோளின் காரணமாக உள்ளது..

ஆதலால் அறிஞர் பெருமக்களாகிய ஆலிம் பெருந்தகைகளிடம் வழிகாட்ட முன்வாருங்கள் வழிகாட்டுங்கள் என உரிமையோடு கோருகிறேன்…

அல்லாஹு நம் எல்லோரின் பாதுகாவலன்..
சிறந்த மெளலா சிறந்த நஸீர்…

இவன்
இஸ்லாமிய ஊழியன்.

செய்யத் முஹம்மத் புஹாரி இப்னு சாதிக்

Leave a reply:

Your email address will not be published.

Site Footer